அனுஷத்தின் அனுகிரஹம்

அனுஷத்தின் அனுகிரஹம்

கடந்த நூற்றாண்டில் நம்மை அதிகம் வியக்க வைத்த மகான் ஸ்ரீ காஞ்சி மகாபெரியவர் என்றால் அது மிகையாகாது. அவர் வாய்மொழி அனைத்தும் அழிக்க முடியாத செல்வம். அவரைப் பற்றி அறியாத தகவல்கள் ஆயிரம் உண்டு. அப்படிப்பட்ட தகவல்களை நமக்காக எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் ஆராய்ந்து, அனுஷத்தின் அனுக்கிரஹம் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்குகிறார். 

நேயர்களின் ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மக்களோடு இந்நிகழ்ச்சியை சொற்பொழிவாகவும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகரை தொடர்ந்து கோவையில் மகாபெரியவரின் மகிமைகளை போற்றிக் கூறியுள்ளார். அந்நிகழ்ச்சி வரும் ஞாயிறு தோறும் மாலை 5.30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.