இலங்கை யாழ்ப்பாணத்திற்கு இன்று முதல் விமான சேவை தொடங்கியது!
சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது. காலை 8.55 மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட விமானம், யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. விமான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 16 போ மட்டுமே பயணித்தனர். 36 ஆண்டுகளுக்கு பின் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை வரவேற்கும் விதமாக ஓடுதளத்தில் இரண்டு புறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. முதல்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது.