கமல் ஹாசன் கருத்துக்கு பிரதமர் மோடி எதிர்ப்பு
புது டெல்லி: தமிழகத்தில் அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
அப்போது, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜை ஆதரித்து பேசிய கமல் ஹாசன் “சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; அவர் தான் நாதுராம் கோட்சே” என்று பேசினார். இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் நிச்சயம் அவர் இந்துவாக இருக்க முடியாது. உலகமே ஒரு குடும்பம் என்பது தான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை” என்றார்.