ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

நாகர்கோவில்: ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இவ்வாண்டே பால் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஆவினில் மூலதன செலவுகளை உயர்த்தி இதர செலவுகளை குறைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பால் கொள்முதல் விலை இந்தாண்டு உயர்த்தப்படும். மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்காதது மிகப்பெரிய தவறு. குற்றம்சாட்டப்பட்ட பாஜக எம்.பி.யை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.