தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20இடஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல்
தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல்
பாமக நிறுவனர் ராமதாஸ், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது
பள்ளி கல்வியில் இருந்து தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே தமிழ்வழி கல்விக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தம் 8 மாதங்களாக கிடப்பில் கிடந்தது. பாமக கோரிக்கை விடுத்த நிலையில், கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இது நமது வெற்றி. தமிழகத்தில் தமிழ்வழி கல்வி ஊக்குவிக்கப்பட வேண்டும். 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாட சட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் 8ம் வகுப்பு வரையாவது தமிழ்வழி கல்வியை கட்டாயமாக்க புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
தமிழ்வழி கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடுக்கு தாமதமாகவேனும் ஒப்புதல் அளித்த கவர்னர், 27 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கான அமைச்சரவையின் பரிந்துரைக்கும் இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும்.