100வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கும் “புலன்விசாரணை”

100வது எபிசோடை நோக்கி  வெற்றிகரமாக பயணிக்கும் “புலன்விசாரணை”

புதிய தலைமுறை தொலைக்காட்சியில், சனிக்கிழமை மதியம் 12:30 மணிக்கும், ஞாயிறுக்கிழமை மதியம் 3:30 மணிக்கும் ஒளிபரப்பாகும் புலன்விசாரணை, 100வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது.

சட்டத்திற்கு புறம்பாக, விதிகளை மீறிசெயல்படும் நடவடிக்கைகளையும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடக்கும் மோசடிகளையும், ஒவ்வொரு வாரமும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் புலன் விசாரணைத்தொகுப்பு, முழுக்க முழுக்க சமூக நோக்கத்திற்காகவும், மக்களின் விழிப்புணர்விற்க்காகவும், ஒளிபரப்பப்படுகிறது. 

மனிதனின் மூளையை ஹேக் செய்வது தொடங்கி, வீடியோ காலிங் மூலம் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதுக் குறித்த புலன் விசாரணையின் சமீபத்திய எச்சரிக்கை பதிவு, தமிழ் தொலைக்காட்சிகளில் இதுவரை யாரும் செய்திராத முயற்சி. முழுக்க முழுக்க சாமானிய மக்களின் விழிப்புணர்விற்காக ஒளிபரப்பாகும் புலன் விசாரணைத் தொகுப்பு, 100வது எபிசோடை நோக்கி வெற்றிகரமாக பயணிக்கிறது.
 
மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த தொகுப்பை, நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஹமீது சிந்தா எழுதி இயக்குகிறார். .