'ஜனநாயகத் திருவிழா’

'ஜனநாயகத் திருவிழா’
'ஜனநாயகத் திருவிழா’

'ஜனநாயகத் திருவிழா’    

வேறு எந்தவொரு நாட்டிற்கும் இல்லாத பெருமையாக தேர்தல் ஜனநாயகம் தழைத்தோங்குவது இங்கு மட்டும்தான். அதனால்தான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த வல்லரசு நாடுகளும் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் முறையை கண்டு அதிசயிக்கின்றன.  எனவேதான், ‘ஜனநாயகத் திருவிழா’  என்ற பெயரிலேயே நியூஸ் 18 தொலைக்காட்சி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.

 

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள 234 தொகுதிகள் குறித்த அறியப்படாத செய்திகளை வழங்கும் உங்கள் தொகுதி அறிந்ததும்…அறியாததும்…

 

தமிழகத்தின் ஒவ்வொரு தேர்தலிலும் திருப்பு முனையாக அமைந்த சுவாரஸ்ய நிகழ்வுகளைக்கொண்ட ‘திருப்புமுனை’

 

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முதல்தலைமுறை வாக்காளர்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் 18 On 18

 

பரப்புரைக் களத்தில் பரபரத்துக் கொண்டிருக்கும் அரசியல் ஆளுமைகளுடன் நாள் முழுவதும் பயணித்து அவர்களது அனுபவங்களைப் பகிரும் ‘ஒரு நாள் ஒரு களம் ஒரு முகம்’ 

 

தேர்தலில் வாக்களிப்பது முக்கியம்… அந்த வாக்குகளை யாருக்காகவும், எதற்காகவும் விலைபேசி விடக் கூடாது என்பது அதைவிட முக்கியம், அதனை வலியுறுத்தும் ‘நம் வாக்கு நம் உரிமை’

 

சுவாரஸ்யமுள்ள தலைவர்களின் பேட்டி, பேச்சு, அறிக்கை -

கலகலப்பான போடுங்கம்மா ஓட்டு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கி, உங்கள் ஆதரவோடு தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2021ன் முடிவுகளையும் துல்லியமாக வழங்கக் காத்திருக்கிறது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி.

 

பேராதரவு தரும் நேயர்களே...மேற்கண்ட அத்தனை சிறப்பு நிகழ்ச்சிகளையும் வரும் மே மாதம் வரை தடையின்றி  நியூஸ்18 தொலைக்காட்சியில் தொடர்ந்து பாருங்கள்...