விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அதிமுக வெற்றி
சென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்.,21 ல் தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் 44,782 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.ஓட்டு விவரம்அதிமுக - 1,13,428திமுக - 68,646நாம் தமிழர் - 2,913 நாங்குநேரி நாங்குநேரி தொகுதியில் 32,811 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.,வின் நாராயணன் வெற்றி பெற்றார்.அதிமுக - 94,802காங் - 61,991நாம் தமிழர் -2,796