வேலம்மாள் பள்ளி மாணவன் குகேஷ் சன்வே ஃபோர்மென்டெரா ஓபன் சதுரங்கப் போட்டியில் சாதனை!

        சென்னையில் உள்ள மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் கிராண்ட் மாஸ்டர் 

டி. குகேஷ் அவர்கள் அண்மையில் சில வாரங்களாக லாரோடா மற்றும் மெனோர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் கலந்து ,கொண்டு வெற்றி அடைந்தார்.  இந்த வெற்றியின்  மூலம் இவர் ,மே 8 2022 அன்று ஸ்பெயினில் உள்ள புன்டா பிரிமாவில்  நடைபெற்ற  செசபிள் சன்வே ஃபார்மென்டெரா சர்வதேச சதுரங்கப் போட்டியில் கலந்து கொண்டு திறமையாக விளையாடி மீண்டும் முதன்மை வெற்றியாளராக தகுதி  அடைந்தார். இந்த வெற்றி அவரது வாழ்நாளில் தொடர்ந்து பெற்ற விருதுகள் பட்டியலில் குறிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இறுதிச்சுற்றில் ஆர்மேனியன் GM ஹைக் எம். மார்டி ரோஸ்யன்என்ற போட்டியாளருடன் கலந்து கொண்டு சிறந்த வெற்றியாளர் பட்டத்தைப் பெறுவதற்காக 10சுற்றுகளில் 8 புள்ளிகள் பெற்று அவருடன் சமநிலையில் இருந்தார்.மேலும் தொடர்ந்து ஆட்டமிழக்காமல் மிகச் சிறந்த ஆற்றலுடன் விளையாடிய குகேஷ் அவர் களுக்கு 16 ELO மதிப்பீட்டுப் புள்ளிகளைப் பெற்றுத் தந்ததுடன் மேலும் அவரது நேரடி மதிப்பீடுகளை 2675 ஆக உயர்த்தி உலகத் தரவரிசையில்  64 வது இடத்திற்கு முன்னணியில் அழைத்துச் சென்றது.           
அவரது தொடர்ந்த வெற்றிக்குப் பள்ளி நிர்வாகம் அவரை பாராட்டி வாழ்த்தியது.