கேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை ரூ.14 குறைவு; 1 கோடி முட்டை தேக்கம்

கேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை ரூ.14 குறைவு; 1 கோடி முட்டை தேக்கம்
கேரளா பறவைக்காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை ரூ.14 குறைவு; 1 கோடி முட்டை தேக்கம்

நாமக்கல் பண்ணைகளில் ஒரு கிலோ கறிக்கோழி விலை ரூ.14 குறைந்து ரூ.78-க்கு விற்பனை செய்யப்படகிறது. பறவைக்காய்ச்சல் பீதியால் கேரளாவுக்கு ஏற்றுமதி குறைந்துள்ளதை அடுத்து கறிக்கோழி விலை சரிந்துள்ளது. ஏற்கனவே பறவைக்காய்ச்சல் காரணமாக நாமக்கல் பண்ணைகளில் முட்டை விலையும் குறைந்துள்ளது.

கேரளாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் ஒரு கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக பண்ணை உரிமையாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் உள்ள பண்ணைகளில்  நாள்தோறும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன என கூறினர்.