மாதவனுக்கு கரோனா தொற்று

மாதவனுக்கு கரோனா தொற்று
மாதவனுக்கு கரோனா தொற்று

கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். நேற்று கூட பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தொடர்ந்து தற்போது நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ட்வீட்ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

இந்த ட்வீட்டில் நடிகர் மாதவன் தெரிவித்திருப்பது ” ரான்ச்சோவை ஃபர்ஹான் தொடர்ந்து சென்று தான் ஆக வேண்டும். வைரஸ் என்றுமே எங்களைத் துரத்தியிருக்கிறார். இந்த முறை அவர் எங்களைப் பிடித்து விட்டார், நான் நலமாக இருக்கிறேன். விரைவில் குணமடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன். உங்கள் அத்தனை அன்புக்கும் நன்றி. நான் நன்றாகத் தேறி வருகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டை 3 இடியட்ஸ் படத்தின் கதாபாத்திரங்களை முன்வைத்து மாதவன் வெளியிட்டுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.