“சுவாசம்” போக்குவரத்துக் காவலர்களுக்கான நுரையீரல் மதிப்பீட்டுச் சோதனை நடத்திய ரோட்டரி கிளப்
“சுவாசம்” போக்குவரத்துக் காவலர்களுக்கான நுரையீரல் மதிப்பீட்டுச் சோதனை நடத்திய ரோட்டரி கிளப்
போக்குவரத்துக் காவலர்களுக்கான நுரையீரல் மதிப்பீட்டுச் சோதனையானது சென்னை கே.கே.நகர் ரோட்டரி கிளப் கே.கே.நகர் சிவன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த ஏற்பாடு Rtn.Dr. மணிமாறன், தலைவர், நுரையீரல் துறை, MIOT மருத்துவமனைகள் அவரது மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவின் உதவியால் நடத்தப்பட்டது . இந்த முகாமில் 50க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.
இந்த உன்னத முயற்சியை ரோட்டரி கிளப் தலைவர் Rtn சுரேந்தர் ராஜ், Rtn. ஹன்னா ஜோன், செயலாளர், PDG. Rtn. AP.கண்ணா, Rtn. இளங்கோ, Rtn. ராம்கோபால், Rtn.Dr. அனிதா மற்றும் Rtn. ஆனந்தராஜ் ஆகியோர் ஆதரித்து செயல்படுத்தினார்.
கடுமையான வெயிலிலும் ,மழையிலிலும் போக்குவரத்துகளை சரி செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு இந்த முகாம் மிக பயனுள்ளதாக இருக்கும் .மேலும் இந்த முயற்சிக்கு போக்குவரத்து காவல் துறையினர் மத்தியிலும் ,மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது .இதுவே முதல் முகாம் என்றும், மேலும் இதுபோன்ற பல மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் ரோட்டரி சங்கத் தலைவர் Rtn சுரேந்தர் ராஜ் தெரிவித்தார்.
மேலும் கிளப் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு முகாமை சிறப்பாக நடத்தினர். விருகம்பாக்கம் தொகுதி சட்டசபை உறுப்பினர் ஏ.எம்.வி பிரபாகர் ராஜா முகாமை துவக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது .