700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய சாதனை!

700 கோல்கள். உலகையே அதிரவைத்த ரொனால்டோவின் புதிய சாதனை!

உலகப் புகழ்பெற்ற பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச கால்பந்து போட்டிகளில் உலகிலேயே முதல்முறையாக 700 கோல்கள் அடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

போர்ச்சுக்கல் மற்றும் உக்ரைன் இரு அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் ஒரு கோல் அடித்து அதன் மூலம் இந்த சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ புரிந்திருக்கிறார்.

ஒவ்வொரு அணிக்கும் இவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை:

ரியல் மாட்ரிட் - 450 கோல்கள்

மான்செஸ்டர் யுனைடெட் - 118 கோல்கள்

போர்ச்சுக்கல் - 95 கோல்கள்

ஜுவேண்டஸ் - 32 கோல்கள்

ஸ்போர்டிங் சிபி - 5 கோல்கள்