3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படாத இலவச லேப்டாப்... இன்றைக்குள் வழங்க உத்தரவு..3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படாத இலவச லேப்டாப்... இன்றைக்குள் வழங்க உத்தரவு..

3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படாத இலவச லேப்டாப்... இன்றைக்குள் வழங்க உத்தரவு..3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு வழங்கப்படாத இலவச லேப்டாப்... இன்றைக்குள் வழங்க உத்தரவு..

கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படாத நிலையில், இன்றைக்குள் வழங்க பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு அரசின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

எனினும், கடந்த 3 ஆண்டுகளாக விலையில்லா லேப்டாப்கள் வழங்கப்படவில்லை. இதனால், தொடர்ந்து மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் போராட்டத்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், 2017-18 மற்றும் 2018-19-ல், பிளஸ் டூ முடித்த மாணவ, மாணவிகளுக்கு இன்றுக்குள் லேப்டாப் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து BONAF IDE எனப்படும் படிப்பதற்கான உறுதிச் சான்றிதழைப் பெற்று, இன்றுக்குள் லேப்டாப் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.