வின் நியூஸின் “வின் வர்த்தகம் – பங்குச்சந்தை நேரலை” நிகழ்ச்சி

வின் நியூஸின்  “வின் வர்த்தகம் – பங்குச்சந்தை நேரலை” நிகழ்ச்சி

நவீனப் பொருளாதாரத்தின் நாடித் துடிப்பான பங்குச் சந்தை என்றால், , ஜாக்பாட் போல் அதிர்ஷ்டம் கொட்டும் என்று பலர் நினைக்கிறார்கள். வேறு பலர், அது ஒரு சூதாட்டம் என்று நினைத்து வெகு தூரம் தள்ளி நிற்கிறார்கள். பங்கு முதலீடு என்பது, நினைத்ததும் பணம் கொட்டும் கற்பக விருட்சமும் அல்ல, காண்பவரை மதிமயக்கும் கானல்நீரும் அல்ல. உரிய முறையில் நுணுக்கங்களை அறிந்து முதலீடு செய்தால் ஏற்றம் தரும் ஏணிதான் பங்குச் சந்தை.

இத்தகைய பங்குச் சந்தை குறித்து இன்றைய தலைமுறையினர் நன்கு அறிந்துகொள்ளும் வகையில் சிறப்பானதொரு நேரலை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறது வின் நியூஸ் தொலைக்காட்சி. வின் வர்த்தகம் பங்குச்சந்தை நேரலை என்ற இந்த நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை ஒளிபரப்பாகிறது. பொருளாதார முன்னேற்றம் கருதும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டி வழிகாட்டுவதுடன், ஏற்கெனவே பங்குச் சந்தையில் ஈடுபட்டுள்ளோரின் சந்தேகங்களுக்கு உரிய வகையில் விளக்கமும் அளிக்கிறது வின் வர்த்தகம்.

செல்வம் வசமாகும் நேரலை, மத்திய – மாநில பட்ஜெட் நேரலை விவாதங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் தொலைக்காட்சி நேயர்கள் ஏற்கெனவே நன்கறிந்த வின் நியூஸ் செய்தி ஆசிரியரும் பத்திரிகை, ஊடகத் துறையில் 30 ஆண்டுக் கால அனுபவம் வாய்ந்தவருமான நா. அனந்த பத்மநாபன், வின் வர்த்தகம் பங்குச் சந்தை நேரலையைத் தொகுத்தளிக்கிறார். இந்த நேரலையில், தமிழகத்தின் முன்னணி பங்குச் சந்தை நிபுணர்கள், பங்குச் சந்தை ஆய்வாளர்கள், பங்கு வர்த்தகப் பயிற்றுநர்கள், நிதி – முதலீட்டு ஆலோசகர்கள் ஆகியோர் பங்கேற்று, நேயர்களின் கேள்விகளுக்கு நேரடியாக விளக்கம் அளிக்கிறார்கள்.

பங்குச் சந்தையில் பாங்காக முதலீடு செய்து “வின்” ஆக நினைப்பவர்கள் தவறாமல் பார்க்கும் நிகழ்ச்சியாக, வின் நியூஸின்  “வின் வர்த்தகம் – பங்குச்சந்தை நேரலை” நிகழ்ச்சி திகழ்கிறது என்றால் அது மிகையல்ல.