"பேட்ட" - விமர்சனம்

"பேட்ட" - விமர்சனம்

ஊட்டியில் உள்ள கல்லூரியில் மாணவனாக படித்து வரும் பாபி சிம்ஹா "டெரர் கேங்" என்ற பெயரில் அட்டகாசம் செய்கிறார், அதே கல்லூரியில் மாணவர்களாக சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் படிக்கிறார்கள். இந்த நிலையில் அந்த கல்லூரியின் வார்டனாக வரும் ரஜினிகாந்த், பாபி சிம்ஹாவின் கொட்டத்தை அடக்குகிறார், இதனால் ரஜினிகாந்தை பழிவாங்க துடிக்கும் பாபி சிம்ஹா ரஜினிகாந்தை அடிப்பதற்கு ஆட்களை செட் செய்கிறார், ஆனால் மற்றொரு கேங் வந்து சனத் ரெட்டியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள், அவர்களிடம் இருந்து சனத் ரெட்டியை ரஜினிகாந்த் காப்பாற்றுகிறார்.

நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி சனத் ரெட்டியை கொல்ல துடிப்பது ஏன்? ரஜினிகாந்த் கல்லூரியின் வார்டனாக ஊட்டிக்கு எதற்காக வருகிறார்? அவருடைய முன்கதை என்ன? நவாசுதீன் சித்திக்கிடமிருந்து சனத் ரெட்டியை ரஜினிகாந்த் காப்பற்றினாரா? என்பதே படத்தின் கதை.

மீண்டும் பழைய ரஜினிகாந்தை திரைக்கு கொண்டு வந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்க்கு பாராட்டுக்கள், அதிரடி அக்ஷன், மாஸ், ஸ்டைல், கிராமத்து கெட்-அப் என ரசிகர்களின் இதயங்களை கொள்ளைகொள்கிறார் சூப்பர்ஸ்டார். படத்தின் வில்லனாக நடித்துள்ள நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். ரஜினிகாந்தின் நண்பனாக வரும் சசிகுமார் சிறப்பாக நடித்துள்ளார்.

சிம்ரன், திரிஷா முதல்முறையாக ரஜினிகாந்திற்கு ஜோடி சேருகிறார்கள், அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்ப நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர், அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது.

மொத்தத்தில் பேட்ட....... சூப்பர் ஸ்டாரின் கோட்டை.