கேஜிஎஃப்' இயக்குநர் பாராட்டிய டேக் டைவர்ஷன் திரைப்படம்!
கேஜிஎஃப்' இயக்குநர் பாராட்டிய டேக் டைவர்ஷன் திரைப்படம்!
மே 6 முதல் உலகெங்கும் வெளியாகிறது 'டேக் டைவர்ஷன் 'திரைப்படம்!
'கேஜிஎஃப் 'பட அனுபவங்கள்: நடிகர் சிவா
'டேக் டைவர்ஷன்' முழு நீள கமர்ஷியல் பேக்கேஜ்!
இப்படத்தை இயக்கி இருக்கும் சிவானி செந்தில் ஏற்கெனவே'கார்கில்' என்ற படத்தை 2018-ல் இயக்கி இருந்தார் .அந்தப் படம் தமிழில் ஒரே ஒரு கதாபாத்திரம் தோன்றும் படமாக ஊடகங்களில் பேசப்பட்டது. நாயகன் காரில் செல்கிற பயணம் சார்ந்த காட்சிகள் தான் அந்தப் படத்தின் கதையாக இருக்கும்.சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
டேக் டைவர்ஷன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் சில காட்சிகளைப் பார்த்த கேஜிஎப் இயக்குநர் பிரசாந்த் நீல் படக்குழுவினரை பாராட்டியும் வாழ்த்தியும் சில வரிகள் எழுதிக் கொடுத்துள்ளார். இதனால் படக்குழுவினர் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
'டேக் டைவர்ஷன் 'படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஏற்று இருக்கும் நடிகர் சிவா என்கிற நடிகர் சிவக்குமார் ஏற்கெனவே சில படங்களில் சின்ன சின்ன பாத்திரங்களில் தோன்றியவர்.வழக்கம்போல கேஜிஎஃப் படக்குழுவினரிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றுள்ளார்.
கேஜிஎஃப் படத்தில் நிறைய தமிழ் நடிகர்களும், தமிழ் பேசும் தொழில்நுட்பக் கலைஞர்களும் பணியாற்ற வேண்டியிருந்தது. இந்நிலையில் சிவாவைப் பிடித்துப்போய் அவருக்கு கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பு வாய்ப்பைத் தந்ததுடன் உதவி இயக்குநராகவும் அவரை அருகில் வைத்துக் கொண்டு விட்டார் இயக்குநர் பிரசாந்த் நீல். இப்படி
கேஜி எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இரண்டு ஆண்டுகாலம், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரையும் பணியாற்றியவர்தான் நடிகர் சிவா.
நடிகர் சிவா கேஜிஎஃப் படத்தில் பணியாற்றியது பற்றிக் கூறும்போது
"ஒரு பெரிய பிரமாண்டமான படத்தில் பணியாற்றியது 20 படங்களில் பணியாற்றிய அனுபவத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது டேக் டைவர்ஷன் ட்ரைலரை பார்த்து என்னை பாராட்டினார். குறிப்பாக படத்தின் டேக் டைவர்ஷன் ட்ரெய்லர் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து உள்ளது என்று கூறினார்.
இப்படத்தில்'பேட்ட', 'சதுரங்கவேட்டை' படங்களில் வில்லனாக நடித்த ராம்ஸ் என்கிற ராமச்சந்திரன் முதன்மைக் கதாபாத்திரமான நாயகனாக நடித்துள்ளார்.
பல படங்களில் கையில் கத்தி போன்ற ஆயுதங்களுடன் ரவுடியாகவும் முரட்டுத்தனமாகவும் வில்லத்தனமாகவும் நடித்துள்ளவர் .இப்படத்தில் கையில் சிப்ஸ் பாக்கெட்டுடன் காதல் பார்வையுடன் முற்றிலும் மாறுபட்டு முழு கதாநாயகனாகத் தோன்றுகிறார். நாயகியாக பாடினி குமாரும் இரண்டாம் கதாநாயகியாக காயத்ரியும் நடித்துள்ளார்கள்.
ஜான் விஜய் தான் வில்லன். விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்காக தேவா பாடிய 'மஸ்தானா மாஸ் மைனரு 'என்கிற கானா பாடல் இணைய உலகில் லட்சக்கணக்கானவர்களின் பார்வைகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.அந்தப் பாடலுக்குப் பிக்பாஸ் புகழ் நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். அதே போல 'யாரும் எனக்கில்லை ஏனடி ? ' என்கிற காதல் வலியைப் பற்றிப் பேசும் பாடலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
படத்திற்கு இசையமைத்துள்ளவர் ஜோஸ் பிராங்க்ளின். இவர் ஏற்கெனவே 'நெடுநல்வாடை', 'என் பெயர் ஆனந்தன்' படங்களின் மூலம் நல்லதொரு அறிமுகம் பெற்றிருப்பவர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு ஈஸ்வரன் தங்கவேல். இவர் ஏற்கெனவே நான்கு படங்களில் பணியாற்றியுள்ளார். படத்தொகுப்பு - விது ஜீவா.
ஆர்வமும் திறமையும் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. முழுக்க முழுக்க அனைவரையும் கவரும் முழுநீள எண்டர்டெய்னர்தான் இப்படம்.
'டேக் டைவர்ஷன்' படம் மே 6 உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது