”மக்கள் திலகம்” எம்.ஜி.ஆர்., அவர்களின் புகழ் பாடும் ”நாற்காலி” திரைப்படத்தின் "FIRST SINGLE"
மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வானொலி,வலை ஒளி மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கம்.
”மக்கள் திலகம்” எம்.ஜி.ஆர்., அவர்களின் புகழ் பாடும் ”நாற்காலி” திரைப்படத்தின் "FIRST SINGLE"-ஐ “புரட்சித் தலைவர்” எம்.ஜி.ஆர்., அவர்களின்104-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று மாலை (ஜனவரி 16-ம் தேதி)
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி.கே.பழனிசாமி அவர்கள் வெளியிட, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ அவர்கள் பெற்றுக் கொண்டார்.
முதல்வரின் முகாம் அலுவலகத்தில் எளிய முறையில் நடந்த இந்நிகழ்வின் காரணமாகவும், கொரோனா பாதுகாப்பு நடைமுறைக்காகவும் தங்கள் அனைவரையும் ஒருங்கே சந்திக்க இயலவில்லை.
கூடிய விரைவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்தித்து விரிவாக பேசவிருக்கிறோம். எதிர்பாராமல் ஏற்பட்ட இச்சிரமத்திற்கு பொறுத்தருளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி!.
தொடர்ந்து உங்கள் பேராதரவையும்,
நலத்தையும் நாடும்,
ஆதம் பாவா.
(தயாரிப்பாளர்)