விஜய் சேதுபதி படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர் - அமலா பால்

விஜய் சேதுபதி படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர் - அமலா பால்

நடிகர் விஜய் சேதுபதியின் 33-வது படத்தை வெங்கட கிருஷ்ண ரோகநாத் என்பவர் இயக்குவதாகவும், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகியும் இருந்தனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது, இது தொடர்பாக அமலா பால் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு " விஜய் சேதுபதியின் 33-வது படத்தில் இருந்து நானாக விலகவில்லை. என்னிடம் ஆலோசிக்காமலே படத்தில் இருந்து என்னை நீக்கிவிட்டனர். 

இப்படத்திற்காக நான் மும்பையில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தேன். திடீரென நான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தயாரிப்பாளர் எனக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பினார். 

ஆடை படத்தின் டீசரை பார்த்தபிறகு தான் தன்னை படத்திலிருந்து நீக்கியிருப்பார்கள் என சந்தேகிக்கிறேன். விஜய் சேதுபதி மீது தனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை, தற்போதும் நான் அவரது ரசிகை" என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.