இயக்குனர் திரு. "உதிரிப்பூக்கள் " மகேந்திரன் மறைவு! - சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் இரங்கல் அறிக்கை!

இயக்குனர் திரு. "உதிரிப்பூக்கள் " மகேந்திரன் மறைவு! - சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் இரங்கல் அறிக்கை!

தமிழ்த் திரையுலகின் பிரபல இயக்குநர்களில் ஒருவரும் இந்திய சினிமா உலகத்தை வியந்து திரும்பி பார்க்க வைத்தவருமான திரு.மகேந்திரன்.(இயற்பெயர் திரு .ஜெ. அலெக்சாண்டர்.) அவர்கள் இயற்கை எய்தினார் எனும் செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறோம்!

மனிதனின் மென்மையான உணர்வுகளை மிக ஆழமான கதைகளாக்கி, அழகுணர்ச்சி மிகுந்த காட்சியமைப்புகளுடன் வெளிவந்த "உதரிபூக்கள்", "முள்ளும் மலரும் " உள்ளிட்ட இவரது திரைப்படங்கள் உலகப்புகழ் பெற்றவை!

புதுமைப்பித்தனின் "சிற்றன்னை " என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, "உதிரிப்பூக்கள் " என்ற திரைப்படத்தை இயக்கினார் மகேந்திரன்.  இது தமிழ் திரையுலக நூறாண்டு கால வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்று. 

இயக்குனர் ஆவதற்கு முன்பு "இனமுழக்கம் " ,  "துக்ளக் " பத்திரிகைகளில் பத்திரிகையாளர் ஆகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர் இயக்குனர் திரு.மகேந்திரன் அவர்கள் !

"உதிரிப்பூக்கள் "உள்ளிட்ட பல அற்புத படைப்புகளைக் கொடுத்த அமரத்துவம் பெறா இயக்குனர் திரு. மகேந்திரன் இன்று இறைவனடி சேர்ந்து அமரர் ஆனது., நம் தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு ஆகும்!

தன், இறுதி நாட்களில், பல தமிழ்த் திரைப்படங்களில் பெரும் குணச்சித்திர நடிகராகவும் கோலோச்சிய, அன்னாரை., இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக குடும்பத்தினருக்கும்., எமது, "சினிமா பத்திரிகையாளர்கள் சங்கம்" தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது!

இயக்குனர் திரு.மகேந்திரன் மறைந்தாலும் அவரின் எண்ணற்ற சாதனைகளும் படைப்புகளும் தமிழ் சினிமா உள்ளவரை அவர் பெயரை போற்றி பாடிக் கொண்டிருக்கும்... என்பது திண்ணம்!

என்றென்றும் நீங்கா துயரில் ...

D.R. பாலேஷ்வர் ,
தலைவர் 
9840141775

R.S.கார்த்திகேயன்,
செயலாளர்.
9176728162

மதி ஒளி குமார்,
பொருளாளர்.
9840708869

மற்றும் , பிற நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் &  உறுப்பினர்கள்.

"சினிமா பத்திரிகையாளர் சங்கம்", சென்னை.