எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா பாண்டி' நாயகி

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படத்தில் இணைந்த 'பில்லா பாண்டி' நாயகி

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு ’பொம்மை’ என்ற டைட்டில் வைக்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது நடிகை சாந்தினி தமிழரசனும் இந்த படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’பில்லா பாண்டி’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் ஜோடியாகவும், மேலும் பல தமிழ்ப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கவுள்ள அடுத்த படத்திலும் சாந்தினி தமிழரசன் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனபின்னர் சாந்தினி தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க நாயகிகளில் பட்டியலில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.