விஜய்சேதுபதியை தொடர்ந்து தளபதி 64 படத்தில் இணையும் விஜய்யின் தீவிர ரசிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 64

விஜய்சேதுபதியை தொடர்ந்து தளபதி 64 படத்தில் இணையும் விஜய்யின் தீவிர ரசிகர்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தளபதி 64 தளபதி விஜய் தற்போது நடித்து முடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகின்றன.

இதனை தொடர்ந்து தளபதி விஜய், மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பது அனைவரும் அறிந்ததே. இது ஒரு கேங்ஸ்டர் திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பு.

மூன்று நாளில் மூன்று அப்டேட் என அறிவிக்கப்பட்ட தளபதி 64 படத்தின் படக்குழு, முதல் அப்டேட் ஆக விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார் என அறிவித்தனர். இந்த அப்டேட் ரசிகர்களை பேரானந்தத்தில் ஆழ்த்தியது.

இன்று இரண்டாவது நாள் இரண்டாவது அப்டேட் ஆக என்ன வரும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனுமான நடிகர் சாந்தனு, கல்லூரி மாணவன் ரோலில் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.