மூன் தொலைக்காட்சியின் பொங்கல் திருவிழா

மூன் தொலைக்காட்சியின் பொங்கல் திருவிழா
மூன் தொலைக்காட்சியின் பொங்கல் திருவிழா
மூன் தொலைக்காட்சியின் பொங்கல் திருவிழா

         கலையின் கலைஞன் !

மைம் (Mime) என்னும் அவிநயக்கூத்து மூலம் கலையுலகத்திற்கு அறிமுகமாகி  மேடை நாடகம் ,  திரைப்படம் என தனக்கென்று தமிழ் கலையுலகில் தனிஇடம்  பிடித்தவர் நடிகர் மைம் கோபி , அவர் மைம்  கலையின் முக்கியத்துவம் , நாடகத்துறையில் தனக்கு கிடைத்த  அனுபவங்கள் , திரையுலக தனது பயணம் என அவருடைய வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி  "கலையின் கலைஞன்". இவரது சிறப்பு பேட்டி  மூன் டிவியில் பொங்கலன்று (15-1-120) காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

                                                            தை  திருவிழா  !

உலக தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருவிழா பொங்கல் ,பொங்கலை உலகம் முழுவதும் உள்ள  தமிழர்கள் உற்சாகத்தோடு கொண்டாடுவார்கள் ,பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் மரபுப்படி நிறைய விளையாட்டு போட்டிகள்  அனைத்து ஊர்களிலும் நடத்தப்படுவது வழக்கம் .அவ்வாறு நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகள் , பொங்கல் திருவிழா முறைகள் ,தமிழ் பண்பாடு , கலாச்சாரங்கள் அனைத்தையும் நம் கண்முன் கொண்டுவரும் வண்ணமயமான சிறப்பு நிகழ்ச்சி " தை திருவிழா" .பல கிராமிய பண்பாடுகளை விளக்கும் இந்நிகழ்ச்சி  மூன் டிவியில் பொங்கலன்று(15-1-120) காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

                                                  நம்ம ஊரு நம்ம கெத்து   !

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் முக்கியமான விளையாட்டு கபடி ,கபடி போட்டிகள் பொங்கல் திருவிழாவை  முன்னீட்டு அனைத்து ஊர்களிலும் நடத்தப்படுவது வழக்கம் .அவ்வாறு இவ்வருட பொங்கலை சிறப்பாகும் வகையில் சென்னையில் வண்ணமயமான கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் நடந்த கபடி போட்டி நடந்தது , 8 அணிகள் பங்குபெற்ற இப்போட்டியில் சிறந்து விளையாடிய அணி பரிசை தட்டி சென்றது .இப்போட்டியின் கலகலப்பான தருணங்களை தொகுப்பாக வழங்கும் சிறப்பு நிகழ்ச்சி " நம்ம ஊரு நம்ம கெத்து"  . இந்நிகழ்ச்சி  மூன் டிவியில் காணும் பொங்கலன்று(17-1-20)காலை 11:00 மணிக்கு  ஒளிபரப்பாகிறது.