உலக மகளிர் விரைவு செஸ் கோனேரு ஹம்பி சாம்பியன்

உலக மகளிர் விரைவு செஸ் கோனேரு ஹம்பி சாம்பியன்

ஷியாவில் நடைபெற்ற உலக மகளிர் விரைவு செஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் கோனேரு ஹம்பி பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ரஷியாவின் மாஸ்கோ நகரில் இப்போட்டிகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சீனாவின் லீ டிங்ஜியை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார் ஹம்பி.
விரைவு செஸ் போட்டியின் முதல் பிரிவில் தோல்வி கண்ட ஹம்பி, அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். ஆடவர் பிரிவில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்தார்.