எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது

எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் உள்ளிட்ட 23 இந்திய மொழிகளுக்கான சிறந்த மொழிபெயர்ப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது, நிலம் பூத்து மலர்ந்த நாள் நாவலுக்காக அதனை எழுதிய எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் பெரும் வரவேற்பை பெற்ற மலையாளத்தில் மனோஜ் குரூர் எழுதிய ”நிலம் பூத்து மலர்ன்ன நாள்” எனும் நாவலை, தமிழில் சிறப்பாக மொழி பெயர்த்தமைக்காக கே.வி.ஜெயஸ்ரீக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.