வேலம்மாள் நெக்சஸ் கல்விக் குழுமம் வழங்கும் இணையவழி தொடர் பொழுது போக்கு நேரலை நிகழ்வுகள்

வேலம்மாள்  நெக்சஸ் கல்விக் குழுமம் வழங்கும்  இணையவழி தொடர் பொழுது போக்கு நேரலை நிகழ்வுகள்

வேலம்மாள்  நெக்சஸ் கல்விக் குழுமம் பல்வேறு பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களைக் கொண்டு நேரலையாக இசைநிகழ்ச்சிகள் நடத்தும் முயற்சி மேற்கொண்டுள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில் அடைபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தங்களின் கல்விப் பணியைத் தொடர முடியாமல் தவிக்கின்றனர்.மாணவர்கள் தங்களின் தனித்திறனை வளர்த்துக் கொள்வதற்காகவும் இசையில் ஈடுபாடு உடைய இசை ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் ஒரு பொழுதுபோக்காகவும் வேலம்மாள் கல்விக் குழுமம் இந்த வாய்ப்பினை வழங்குகிறது.

*நேரலையில் புகழ்பெற்ற பிரபலங்களுடன் இணைந்திருங்கள்             
 *மதிப்பு மிகு. சைலு ரவிந்திரன் -      கிட்டார்
 • திரு.ராஜேஷ் வைத்தியா- வீணை
 • மதிப்பு மிகு.மனோன்மணி -சாரங்கி
*திரு.சீனிவாஸ் பின்னணிப் பாடகர்
• திருமதி.ராஜலட்சுமி &திரு. செந்தில் பின்னணிப் பாடகர்கள்
 • திரு.அரவிந்த் சீனிவாஸ் பின்னணிப் பாடகர்
• மதிப்பு மிகு.ரேஷ்மா -சன் சிங்கர் இறுதிப் போட்டியாளர் & இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா ஐயாவின் பேத்தி
• திரு.சர்மா மேஜிக் மற்றும் வென்ட்ரிலோக்விஸ்ட்
• மதிப்பு மிகு.கல்பனா -பின்னணிப் பாடகர்
•திருமதி. நித்யா ஸ்ரீ மகாதேவன்- பின்னணிப் பாடகர்
•மதிப்பு மிகு -ஸ்வகதா பின்னணிப் பாடகர்
 *திரு.ராஜவேலு-விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் பலகுரல் கலைஞர்.
2020 ஜூன் 26 முதல் ஜூலை 7 2020 வரை தினமும் www.velamalnexus.com இல் நேரடி ஒளிபரப்பு வழங்கப்படுகிறது நேர்த்தியான  இத்தொடர் இசை அமர்வுகளுக்கு உங்கள்  பொன்னான நேரத்தை ஒதுக்குங்கள்,இசை இன்பத்தில் இணைந்து மகிழுங்கள்.