வேலம்மாள் பள்ளி மாணவர் கெம்போ கராத்தே போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம்

வேலம்மாள் பள்ளி மாணவர் கெம்போ கராத்தே போட்டியில் தேசிய அளவில் இரண்டாம் இடம்

2019ஆம் ஆண்டுக்கான தேசிய ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப்பிற்கான முதல் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் முகப்பேர் மேற்கு, வேலம்மாள் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர் பி.ஜெகதீஷ்வரன், குமிட் கராத்தே பிரிவிலும் (யு-18), கட்டா கராத்தே பிரிவிலும் (யு-20) பிரிவிலும் இரண்டாம் பரிசை வென்றுள்ளார்.

நீலகண்டன் கெம்போ கராத்தே அகாடமி ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்த இப்போட்டி, அயனாவரம், ஐ.சி.எஃப்.பில் அமைந்துள்ள ஏ.பழனிசாமி மல்டி ஸ்போர்ட்ஸ் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கராத்தே விளையாட்டு ஒரு தற்காப்பு கலை ஆகும்.
பள்ளிப் பருவத்திலேயே இக்கலையில் சாதனை புரிந்த மாணவரைப் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்துகிறது.