தமிழகத்தில் 150ஐ கடந்த பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9 பேர் கொரோனாவால் உயிரிழப்பு.சென்னையை சேர்ந்த 7 பேரும், செங்கல்பட்டு, திருவள்ளூரை சேர்ந்த தலா ஒருவர் பலி.உயிரிழப்பு எண்ணிக்கை 154ஆக உயர்வு. தமிழகத்தில் 20,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 874 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி.இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக உயர்ந்தது.சென்னையில் இன்று மட்டும் 618 பேருக்கு கொரோனா.11,000ஐ கடந்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 765 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 11,313 ஆக அதிகரித்தது.செங்கல்பட்டில் 1,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு. இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.