தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது!
இன்றைய கொரோனா பாதிப்பு - தமிழக நிலவரம்:
மொத்த பாதிப்பு - 2,058
இன்று உறுதியானவர்கள் - 121
குணமடைந்தவர்கள் - 1,128
உயிரிழப்பு - 25
சிகிச்சை பெறுபவர்கள் - 902
மொத்த பரிசோதனைகள் - 1,01,874
இன்றைய பரிசோதனைகள் - 7,093
தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,128ஆக உயர்வு.
தமிழகத்தில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு.தமிழகத்தில் இன்று மேலும் ஒருவர் கொரோனாவினால் உயிரிழந்ததையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 25ஆக உயர்ந்தது. செங்கல்பட்டில் 12 பேருக்கு இன்று பாதிப்பு..
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 103, செங்கல்பட்டு மாவட்டத்தில் 12 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,000ஐ கடந்தது.இன்று மேலும் 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,937ல் இருந்து 2,058ஆக அதிகரித்தது.