பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை : தமிழக அரசு

பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை : தமிழக அரசு
பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை : தமிழக அரசு

பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை : தமிழக அரசு 

சென்னை: நவ.16 ல் திறக்கப்படுவதாக இருந்த பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பிரச்னையால், ஏழு மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. 9,10,11,12-ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும், பெற்றோரின் கருத்துக்களை கேட்ட பின், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கருத்து கேட்பு கூட்டம், தமிழகம் முழுவதும், 9ம் தேதி நடந்தது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சூழ்நிலைக்கேற்ப பள்ளிகள் திறப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேபோல கல்லூரிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் முதுநிலை இறுதியாண்டு பயிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு டிசம்பர் 2-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதர வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி திறப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.