SRM கல்லூரியின் வழிகாட்டி நிகழ்வு
SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வழிகாட்டி நிகழ்வு
2019 – 2020 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்வும் வருகையும் காட்டாங்குளத்தூர் வளாகத்திலுள்ள முனைவர் தி.பொ. கணேசன் கலையரங்கில் (04.07.2019) நடைபெற்றது. இவ்விழாவானது நுங்கம்பாக்கம் சிம்ஸ் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் திருமதி இர.பத்மபிரியா தலைமையில் நடைபெற்றது.
வரவேற்புரை வழங்கிய கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. வாசுதேவராஜ் அவர்கள் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்தும் அதை மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் அறிவுரை வழங்கினார். இவ்விழாவிற்கு வருகை புரிந்த சிறப்பு விருந்தினர், மேலாண்மை இயக்குநர், இயக்குநர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்தி அமைந்தார்.
தலைமையுரை வழங்கிய சிறப்பு விருந்தினர் நுங்கம்பாக்கம் சிம்ஸ் மருத்துவமனையின் மேலாண்மை இயக்குநர் திருமதி இர.பத்மபிரியா அவர்கள் மாணவர் சேர்க்கைக்கான கடிதமும், அடையாள அட்டையும், புத்தகமும் மற்றும் கையேடுகளையும் வழங்கி வாழ்த்தினார். இந்த கல்லூரியில் கல்வி கற்கும் மூன்றாண்டுகளும் அர்த்தமுள்ளதாகவும், திறன்மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என வாழ்த்தியமர்ந்தார்.
இவ்விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகச் சென்னை வடக்கு மண்டல வருமானவரித்துறையின் இணை ஆணையர் திருமிகு. A.B. தேவேந்திர பூபதி அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்குச் சிறப்புரையும் மெருகுரையும் நல்கினார். இன்றைய சமூக நிலையில் மாணவர்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள், சவால்கள் குறித்து எடுத்துரைத்து அவற்றைச் சாமளித்து வாழ்க்கையில் முன்னேறும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். அப்போது SRM கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்ததன் மூலம் நீங்கள் சிறப்பானதொரு தொடக்த்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். எனவே தாய், தந்தை ஆற்ற வேண்டிய கடமையைச் செவ்வனேச் செய்துள்ளனர். நீங்கள் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய உதவியாக சிறந்த முறையில் கல்வி கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும். வளாக வேலைவாய்ப்பினைப் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் விதை பந்து போன்று தற்போது விதைக்க பட்டுள்ளீர்கள். எதிர்காலம் தழைத்தோங்க சுற்றுச்சூழல் வளங்களை மேம்படுத்துவதுடன் தம்மையும் மேம்படுத்தி வளர வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்புரை வழங்கிய SRM அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தின் இணைத்துணை வேந்தரும் எங்கள் கல்லூரியின் இயக்குநருமான முனைவர் தி.பொ.கணேசன் அவர்கள் இந்நிறுவனத்தின் சிறப்பினையும் தாங்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் முன்னேற்றமடைய வேண்டும் என்பதைக் கூரி வாழ்த்தி அமைந்தார்
சிறப்புரை நல்கிய கல்லூரியின் இணை இயக்குநர் முனைவர் கே. சுப்புராம் அவர்கள் மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் அதற்கு மாணவர்கள் தன்னை எவ்வாறு தயார்படுத்திக்கொண்டு பன்முக ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
வழிகாட்டு நெறியுரை வழங்கிய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கா.மதியழகன் அவர்கள் மாணவச்செல்வங்கள் உயர்கல்வித்துறையில் தன்னை எவ்வாறு தகவமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கல்லூரி விதிமுறைகளைத் தாங்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
நிறைவாகக் காட்சித் தகவலியல் துறைத்தலைவர் திரு பொ. நடராஜன் அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
SRM கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வழிகாட்டி நிகழ்வு
2019 – 20 ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்வும் வருகையும் காட்டாங்குளத்தூர் வளாகத்திலுள்ள முனைவர் தி.பொ. கணேசன் கலையரங்கில் (04.07.2019) நடைபெற்றது. இவ்விழாவானது நுங்கம்பாக்கம் சிம்ஸ் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் திருமதி இர.பத்மபிரியா தலைமையில் நடைபெற்றது.