சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு நிவாரண பொருட்கள்

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு நிவாரண பொருட்கள்
சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு நிவாரண பொருட்களை

இந்த நிவாரணப் பொருட்கள் தொகுப்பில் அரிசி 5 கிலோ, சர்க்கரை ஒரு கிலோ என்று தொடங்கி கோதுமை, துவரம் பருப்பு, புளி, கடுகு, வெந்தயம், மிளகு, சீரகம்,மஞ்சள்தூள் ,மிளகாய்த்தூள் போன்ற 12 அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்கள்.

இந்த மாபெரும் மனிதநேய உதவிக்கு ஜி.ஆர்.டி நிறுவனத்திற்குச் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் ரவிவர்மா நெகிழ்ச்சியோடு நன்றி கூறினார்.

இந்த உதவி கிடைக்கத் துணை நின்ற ஜி.ஆர்.டி நிறுவன மக்கள் தொடர்பாளர் திரு சத்திய நாராயணன் அவர்களுக்கும் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு வந்து சேர்ந்திருக்கும் இந்த நிவாரண பொருட்களைச் சரியான முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வந்து அலுவலகத்தில்  பெற்றுக் கொள்ளலாம் என்று சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.