புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வரும்10-ம் தேதி மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!
புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வரும்10-ம் தேதி மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!
டெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டட பணிகளுக்கான அடிக்கல்லை வரும் 10-ம் தேதி பிரதமர் மோடி நாட்டுகிறார் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய அலுவலக கட்டடம் பழைய அலுவலகம் இருக்கும் இடத்தில் கட்டப்படும். ரூ.971 கோடி மதிப்பீட்டில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் அமைகிறது எனவும் கூறினார்.