ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார் ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி, 

அந்தமான் கடல் பகுதியில் கடந்த 10-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மெல்ல நகர்ந்து மத்திய வங்கக் கடலின் மேற்கு பகுதியில் மையம் கொண்டது. 

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை தற்போது தீவிரமாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடாவுக்கு அருகே ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடந்தது. அப்போது, மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

கிருஷ்ணா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், பிரகாசம் அணையில் இருந்து உபரி நீர்வெளியேற்றப்பட்டது. இதையடுத்து, கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், அவைகளை அப்புறப்படுத்தும் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிப்பு அடைந்த பகுதிகளை ஜெகன் மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.