மத்திய மந்திரிசபையில் இடம்: ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பேச்சு

மத்திய மந்திரிசபையில் இடம்: ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்குமார் பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் 350-க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க.வில் இருக்கும் ஒரே மக்களவை எம்.பி.யான ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத்குமார், மத்திய மந்திரியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக, மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரவீந்திரநாத் குமார் கூறுகையில், “நான் வெற்றி பெறுவதற்காக பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய மந்திரிசபையில் இடம் பெறுவதற்காக வெற்றி பெறவில்லை. கனவிலும் அந்த எண்ணம் கிடையாது. மக்களின் நலனுக்காக வெற்றி பெற்றதாக நினைக்கிறேன். தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்..