தொடர்ந்து 10-வது முறை; ‘சேஸிங் நாயகன்’ கோலி, ஜடேஜா அபாரம்: ஒருநாள் தொடரை வென்றது இந்தியா
ரோஹித் சர்மா, ராகுல், கோலியின் அபார அரைசதம், ஜடேஜா, சர்துல் தாக்கூரின் கடைசிநேர அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் கட்டாக்கில் நேற்று நடந்த மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.
முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் அணி 5 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் சேர்த்தது. 316 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களம்கண்டன இந்திய அணி 8 பந்துகள் மீதம் இருக்கையில் இலக்கை அடைந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
பேட்டிங்கில் ரோஹித் சர்மா(63) ராகுல்(73), கோலி(85), ஜடேஜா(39*), சர்துல் தாக்கூர்(17*) ஆகியோரின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தது.
தொடரை வெல்ல நடத்தப்படும் இருதரப்பு ஒருநாள் தொடரில் இறுதிஆட்டத்தில் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப்பின் சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.