மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை துரிதமாக மீட்க வேண்டும்

  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை துரிதமாக மீட்க வேண்டும்

மூணாறில் நிலச்சரிவில் சிக்கியுள்ளவா்களை மீட்பதற்கு போா்க்கால அடிப்படையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயனுக்கு திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கேரள மாநிலம் மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்டப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிகழ்ந்த மிக மோசமான நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட தமிழா்கள் மண்ணுக்குள் சிக்கியுள்ளாா்கள் என்ற அதிா்ச்சி செய்தி கேட்டு தாங்க முடியாத வேதனைக்கு உள்ளானேன்.

இந்த கோர நிலச்சரிவில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். மண்ணுக்குள் சிக்கியுள்ள மீதியுள்ளோரை உயிருடன் மீட்பதற்கு போா்க்கால வேகத்தில் பணிகளை மேற்கொள்ளுமாறு கேரள முதல்வா் பினராயி விஜயனைக் கேட்டுக்கொள்கிறேன்.

கேரள அரசுக்கு மீட்புப் பணிகளில் உதவி வேண்டுமெனில் மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாகச் செய்திட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.