இலக்கு-50000 பெண் பயனீட்டாளர்கள்

இலக்கு-50000 பெண் பயனீட்டாளர்கள்
இலக்கு-50000 பெண் பயனீட்டாளர்கள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர்  மண்டலம் மற்றும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் (RSETI), தஞ்சாவூர் இணைந்து நடத்திய மாபெரும் விழா இன்று (ஜனவரி 24,2020) தஞ்சாவூரில் தமிழரசி மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கர்ணம் சேகர்தலைமையேற்றனர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக அதிகாரிகள் திரு. K. சுவாமிநாதன் மற்றும் திரு அஜய் குமார் ஸ்ரீவத்சவா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் திரு. சுஷில் சந்திர மொஹந்தா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சை மண்டல மேலாளர் திரு K.S. லக்ஷ்மி நரசிம்மன் ஆகியோர் பங்கேற்றனர்.
                                            
தமிழ் நாட்டில் 11 மாவட்டங்கள் மற்றும் கேரளாவில்  திருவனந்தபுரம் மாவட்டம், மொத்தம் 12 மாவட்டங்களில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (முன்னோடி வங்கி) கீழ் செயல்படும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களினால் வெற்றிகரமாக 50000 பெண் பயனீட்டாளர்களுக்கு பல்வேறு துறைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டதை கொண்டாடும் விதமாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. தையல் கலை, பின்னல் கலை, அழகுக்கலை, உணவு பொருட்கள் தயாரிப்பு, காகிதப்பை தயாரித்தல், ஆடு, மாடு, கோழி மற்றும் மீன் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் போன்ற விவசாயம் சார்ந்த பல்வேறு தொழில்களில் பெண் பயனீட்டாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையங்களினால் பயிற்சி அளிக்கப்பட்டு சாதனையாளர்களாக திகழும் பெண் தொழில்முனைவோர் இந்த விழாவில் சிறப்பிக்கப்பட்டனர்.அவர்கள் தங்களின் வெற்றியில், கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கினைபற்றி பகிர்ந்துக்கொண்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பயனீட்டாளர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.மேலும் ரூ 3.26 கோடி மதிப்பில் ஆன கடனுதவிகள்பல்வேறு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.  கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயிற்சிப்பெற்றவர்களால் செய்யப்பட்ட பல்வேறு பொருட்கள் 30க்கும் மேற்பட்ட விற்பனையகங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.