அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த இரண்டு மாடுபிடி வீரர்களுக்கு முதல் பரிசு அறிவிப்பு
மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் திருநாவுக்கரசுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த மறறொரு வீரர் விஜய்க்கும் முதல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மாடுபிடி வீரர்கள் திருநாவுக்கரசு மற்றும் விஜய்க்கும் இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சிறந்த காளையாக வில்லாபுரம் ஜி.ஆர்.கார்த்திக் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.