சென்னை எக்ஸ்ப்ரஸ் அவென்யூவின் கிளை

சென்னை எக்ஸ்ப்ரஸ் அவென்யூவின் கிளை

சென்னை, ஜூலை 5 2019: இந்தியாவின் முன்னணி காஸ்மெடிக்ஸ் நிலையங்களில் ஒன்றான ஹெல்த் அண்டு க்ளோவின் பிரமாண்டமான புதுப்பிக்கப்பட்ட கிளை, சென்னை எக்ஸ்ப்ரஸ் அவென்யூவில் ஆரம்பம்.

பிரபல திரைப்பட நடிகையும், ‘நியூ நேச்சுரல்ஸ்’ சரும பராமரிப்பு பிராண்டின் விளம்பரத் தூதரமுமான நிக்கி கல்ராணி திறப்பு விழாவில் பங்கேற்று தொடங்கி வைத்தார். எக்ஸ்ப்ரஸ் அவென்யூவின் இரண்டாவது மாடியில், 1650 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில், உயர்தர அழகு சாதன பொருள்கள் விற்பனைக்கு உள்ளன. 

சென்னை மாநகரத்தின் ட்ரெண்டிங் காஸ்மெடிக்ஸ் ஷாப்பிங் நிலையமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் ஷாப்பிங் அனுபவத்தை பூர்த்தி செய்யும் வகையில், அழகு சாதன பொருள்கள் வெவ்வேறு பிரிவுகளில் அலங்கரிப்பட்டுள்ளன. மேக்-அப், சருமம் - கேச பராமரிப்பு, ஹெர்பல், இயற்கை அழகு சாதன பொருள்கள், , வாசனைப் பொருள்கள், ஆண்களுக்கான அழகு பராமரிப்பு பொருள்கள் என அழகு சம்பந்தமான அனைத்து முன்னணி பிராண்டுகளின் பொருள்களையும் ஹெல்த் அண்டு க்ளோவில் ஷாப்பிங் செய்யலாம்.

மேக்-ஓவர், ஸ்கின் டெஸ்டிங், நெயில் ஆர்ட், என சுவாரஸ்யமான பல மினி ஸ்டோர்களும் ஹெல்த் அண்டு க்ளோ கிளையில் இடம் பெற்றுள்ளன. கூடுதலாக, வாடிக்கையாளர்களுக்கு தேவையான சரும பிரச்சனைகளுக்கான டிப்ஸ் வழங்கப்படுகின்றன.

இது குறித்து பேசிய, ஹெல்த் அண்டு க்ளோ நிர்வாக இயக்குநர், தலைவர் திரு. வெங்கட்ரமணி, "எக்ஸ்ப்ரஸ் எவென்யூ ஹெல்த் அண்டு க்ளோ கிளை விரிவாக்கத்தினால் பலவகை அழகு சாதnai பொருள்களை விற்பனையில் சேர்த்துள்ளோம். காஸ்மெடிக்ஸ், சரும பராமரிப்பு, ஆண்களுக்கான, அழகு சாதானப் பொருள்கள்  என எதுவாக இருந்தாலும் தரமான பொருள்களையே வாடிக்கையாளர்கள் வாங்க விரும்புகின்றனர்.

எனவே, இங்கு விற்பனையாகும் ஒவ்வொரு பொருளும் தரமாக இருக்க வேண்டுமென்பதில் ஹெல்த் அண்டு க்ளோ முழு கவனம் செலுத்துகிறது. 

தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச பிராண்டுகளும், குறிப்பாக 'K-பியூட்டி’’ பிராண்டும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, இஸ்ரேல், கொரியா, மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, போலாந்து, கனடா ஆகிய நாடுகளின் காஸ்மெடிக்ஸ் பிராண்டுகளின் அழகு சாதன பொருள்கள் ஹெல்த் அண்டு க்ளோவில் இடம் பெற்றுள்ளன.

சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதுப்பிக்கப்பட்ட கிளையால், ஹெல்த் அண்டு க்ளோவின் கிளை வளர்ச்சி விரிவடைந்துள்ளது" என்றார்.

டெர்மாஃபிக், அவீன், காயா, பால்மர்ஸ், ட்ரீ ஹட், யூவ்ஸ் ரோச்சர், இட்ஸ் ஸ்கின், ஜெர்ஜென்ஸ், நியூட்ரோஜினா, ஓ3, ஓலே என பல சர்வதேச பிராண்டுகளின் பொருள்களை இங்கு ஷாப்பிங் செய்யலாம். 'K-பியூட்டி’’ பிராண்டுகளான டெர்மல் கொரியா, மிராபெல், ஃபேஸ் ஷாப் ஆகியவையும் பிரத்யேகமாக இடம் பெற்றுள்ளன.

மேலும், தி மேன் கம்பெனி, உஸ்ட்ரா, பியர்டோ போன்ற ஆண்களுக்கான பியூட்டி பிராண்டுகளும் இங்கு உள்ளன. லேக்மி, லோரியல், மேபிலின், கலர்பார், சாம்போர் போன்றவையும், சுகர் காஸ்மெடிக்ஸ், நெயில் ப்ளே, ஃபேசஸ் போன்ற புதிய பிராண்டுகளும் ஹெல்த் அண்டு க்ளோவில் இடம் பெறத் தவறவில்லை.

இதைத் தவிர்த்து, லேபெல் எம், வெல்லா, பி ப்ளன்ட், டோனி அண்டு கை, செமி டி லினோ, வாவ் போன்ற கேச பரமாரிப்பு பிராண்டுகளும் உள்ளன. குறிப்பாக, ஹெல்த் அண்டு க்ளோவில் அமைக்கப்பட்டிருக்கும் ஹெர்பல், இயற்கை அழகு சாதன பொருள்களுக்கான தனி பிரிவுகள் வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்தை எளிதாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பயோடிக், லோட்டஸ், ஆர்கானிக் ஹார்வெஸ்ட் பிராண்டுகளும், வைல்ட் ஐடியாஸ், ஃபாஷன் இன்டல்ஜ், மிட்வானா போன்ற புதிய பிராண்டுகளும் உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட வாசனை காஸ்மெடிக்ஸ்களும் இங்கு உள்ளன. பேக்கோ ரபேன், மான்ட் ப்ளாங்க், கெஸ், போலீஸ், ஜாகுவார், டேவிட் பெக்காம், போகர்ட், நாடிக்கா போன்ற பிராண்டுகளும் உள்ளன.

வாரத்தின் ஏழு நாட்களிலும், காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை ஹெல்த் அண்டு க்ளோ 
ஸ்டோர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்த் அண்டு க்ளோவில் உள்ள அழகு பராமரிப்பு நிபுணர்கள், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற ஆலோசனை வழங்குகின்றனர். அழகுக்கலை ஆர்வலர்கள் மத்தியில் பிரபலமான ஹெல்த் அண்டு க்ளோ, தரமான ஷாப்பிங் அனுபவம் தரக்கூடியது என்ற நம்பிக்கையை பெற்ற காஸ்மெடிக்ஸ் ஸ்டோர்.