உன்னாவ் பலாத்கார வழக்கு: எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு ஆயுள் முடியும்வரை சிறை- டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

உன்னாவ் பலாத்கார வழக்கு: எம்எல்ஏ குல்தீப் செங்காருக்கு ஆயுள் முடியும்வரை சிறை- டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

உன்னாவ் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் வாழ்நாள் காலம் முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்றும், ரூ.25 லட்சம் இழப்பீடாகப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் டெல்லி நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் பங்கார்மாவு தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார். கடந்த 2017-ம் ஆண்டு உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, குல்தீப் சிங் செங்கார் மீது பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார்.

உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததால், எம்எல்ஏ செங்கார் கைது செய்யப்பட்டார். அவரைக் கட்சியில் இருந்தும் பாஜக தலைமை நீக்கியது. குல்தீப் சிங் செங்கார் மீது போக்ஸோ சட்டம், பலாத்காரம், ஆட்கடத்தல், மிரட்டல், வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவருமான சசி சிங்கிற்கு எதிராக சிபிஐ ஆதாரங்களை நிரூபிக்காததால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமி மைனர் என்பதை சிபிஐ நிரூபித்துள்ளதால், போக்ஸோ சட்டப்படி விசாரிக்கப்பட்டது" என தீர்ப்பளித்தார்.
இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு நடந்ததால், திருத்தப்பட்ட போக்ஸோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை அளிக்கும் பிரிவை குல்தீப் சிங்கிற்கு விதிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, எம்எல்ஏ பதவியும் பறிபோகும்.