காற்று சுத்திகரிப்பு ஏசிகள், கன்வெர்டபிள் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவைப்பாடு கோடையின் வெப்பத்திற்கு இணையாக சென்னையில் உயர்ந்து வருகின்றன: ஃபிளிப்கார்ட் நுண்ணறிவு

காற்று சுத்திகரிப்பு ஏசிகள், கன்வெர்டபிள் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவைப்பாடு கோடையின் வெப்பத்திற்கு இணையாக சென்னையில் உயர்ந்து வருகின்றன: ஃபிளிப்கார்ட் நுண்ணறிவு
காற்று சுத்திகரிப்பு ஏசிகள், கன்வெர்டபிள் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவைப்பாடு கோடையின் வெப்பத்திற்கு இணையாக சென்னையில் உயர்ந்து வருகின்றன: ஃபிளிப்கார்ட் நுண்ணறிவு

காற்று சுத்திகரிப்பு ஏசிகள், கன்வெர்டபிள் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான தேவைப்பாடு கோடையின் வெப்பத்திற்கு இணையாக சென்னையில் உயர்ந்து வருகின்றன: ஃபிளிப்கார்ட் நுண்ணறிவு

நாடு முழுவதும் கோடை வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் வீட்டிலேயே வசதியான சூழலை உருவாக்க குளிரூட்டும் கருவிகளை அதிகளவில் நாடுகின்றனர். இது வாடிக்கையாளர்களின் உடல்நலம் மற்றும் ஆரோக்கியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல்வேறு புதிய தலைமுறை குளிரூட்டும் கருவிகளின் வளர்ச்சிக்கும் வழிவகுத்துள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் நுண்ணறிவுகளின் படி, தற்போதைய வெப்ப அனல், ஏசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் மற்றும் மின்விசிறிகளுக்கான தேவைப்பாடுகளை நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. சென்னையில், ஒட்டுமொத்த குளிரூட்டல் சாதனங்களின் தொகுப்பும் 1.2x வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதில், ஏசிகள், பருவகாலச் சாதனங்கள் (குளிரூட்டிகள் மற்றும் மின்விசிறிகள்) மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவை முறையே 1.3x, 1.3x மற்றும் 1.1x வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் மற்றும் செலவு சேமிப்பு ஆகியவற்றில் மீது அதிக கவனம் செலுத்துவதால் வாடிக்கையாளர்கள் பாக்டீரியா எதிர்ப்பு, காற்று சுத்திகரிப்பு மற்றும் ஆற்றல்-திறனுள்ள அம்சங்களைக் கொண்ட சாதனங்களைத் தேர்வுசெய்கின்றனர். இந்த செயல்பாடுகள் முன்பே இருந்தபோதும், காற்றின் தரத்தில் அதிக கவனம் செலுத்தும் போக்கு வாடிக்கையாளர்களிடையே தற்போது அதிகமாகக் காணப்படுகிறது. ஃபிளிப்கார்ட் செயலியில் நடத்தப்பட்ட ஒரு நுகர்வோர் கணக்கெடுப்பு இந்த மாற்றத்தை உறுதிப்படுத்தியது, கணக்கெடுப்பில் பங்கேற்ற பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் தங்கள் ஏசிகளில் சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாக உள்ளமைக்கப்பட்ட காற்று சுத்திகரிப்பு அம்சத்திற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இது ஃபிளிப்கார்ட்டில் குளிரூட்டும் கருவிகளின் தேர்வை விரிவுபடுத்துகின்ற சாம்சங், ஹையர், வேர்ல்பூல், டெய்கின், புளூஸ்டார், வோல்டாஸ் மற்றும் கோத்ரேஜ் உள்ளிட்ட ஒத்த செயல்பாடுகளைக் கொண்ட ஏசிகளின் அதிக பிராண்டுகளை அறிமுகம் செய்ய வழிவகுத்துள்ளது.

குளிர்சாதன பெட்டிகளைப் பொருத்தவரை, தயிர் தயாரிப்பு போன்ற பல செயல்பாட்டு அம்சங்களுடன் அதிக சேமிப்பகத்தையும், ஆற்றல் திறன் மற்றும் கன்வெர்டபிள் அம்சங்களையும் கொண்ட தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஃப்ரீஸரின் (உறைவிப்பான்) பயன்பாடு குறைவாக இருப்பதால், கன்வெர்டபிள் விருப்பங்கள் அதிக அமலாக்கத்தைக் காண்கின்றன, இது ஃபர்ஸர் பகுதியை சாதாரண குளிர்சாதனப் பகுதி போன்று மாற்றும். இது தவிர, வாடிக்கையாளர்கள் அதிகளவு சேமித்து வைக்கத்தக்க சாதனங்களையும் விரும்புகிறார்கள். ஏனெனில் அவர்கள் தொடர்ந்து வேலை மற்றும் படிப்பை வீட்டிலிருந்தபடியே மேற்கொள்கிறார்கள். மேலும், ஃபிளிப்கார்ட்டில் தயாரிப்பு மாற்று திட்டங்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து அதிக சதவீத வாடிக்கையாளர்கள் குளிர்சாதன பெட்டியை வாங்கும் போது மாற்று விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். மேலும், கடந்த ஒரு வருடத்தில் நோ காஸ்ட் EMIயை ஏற்றுக்கொள்வது கிட்டத்தட்ட 20% அதிகரித்துள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த திட்டங்களின் மூலம், மலிவு விலையில் தங்கள் சாதனங்களை மேம்படுத்த ஃபிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு உதவ முடியும்.

இது தவிர, வாடிக்கையாளர்கள் மின்சார கட்டணத்தைச் சேமிக்கவும், செயல்பாட்டு செலவைக் குறைக்கவும் ஆற்றல் திறனுள்ள ஏசிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகளைத் தேர்வு செய்கிறார்கள். 5 நட்சத்திர உயர் திறன், உயர் ஆற்றல் திறன் கொண்ட ஏசி, குளிர்சாதன பெட்டிகள் அமலாக்கத்திலும் இதேபோன்ற போக்கு பிரதிபலிக்கின்றன.

சுவாரஸ்யமாக, மேற்கூறிய போக்குகள் பெருநகரங்களில் மட்டுமல்லாது, சிறிய நகரங்கள் மற்றும் அடுக்கு 2 மற்றும் 3 நகரங்களிலும் காணப்படுகின்றன மற்றும் அவையும் இந்த வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. இது, சிறிய நகரங்களில் எண்ணவோட்டம் மற்றும் வாங்குதல் விருப்பத்தின் மாற்றத்தைத் தெளிவாகக் குறிக்கிறது.

ஃபிளிப்கார்ட்டின் பெரிய உபகரணங்கள் பிரிவின் துணைத் தலைவர் ஹரி G.குமார் அவர்கள், “கோவிட் -19 தொற்றுநோய் இப்போது காற்று சுத்திகரிப்பு, விரிவாக்கக்கூடிய சேமிப்பு மற்றும் எரிசக்தி திறன் செயல்பாடுகள் கொண்ட சாதனங்களைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கான முன்னுரிமைகளை கடுமையாக மாற்றியுள்ளது. இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படும் குளிரூட்டும் உபகரணங்கள் சந்தை முதிர்ச்சியடைவதை இது குறிக்கிறது. வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பற்றிய நுணுக்கமான புரிதலுடன் ஒரு உள்நாட்டு மின்-வர்த்தகச் சந்தையாக, முன்னணி பிராண்டுகள் மற்றும் விற்பனையாளர் கூட்டாளர்களுடன் நாங்கள் தொடர்ந்து ஒத்துழைப்போம், மில்லியன் கணக்கான இந்திய வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் சிறந்த தயாரிப்புகளை வீட்டு வாசலில் கொண்டு சேர்ப்போம்” என்று கூறினார்.