திமுகவின் கோரிக்கைக்கு சபாநாயகர் மறுத்து விட்டார்

திமுகவின் கோரிக்கைக்கு சபாநாயகர் மறுத்து விட்டார்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் தந்துவிட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தி பேசிய நிலையில், சபாநாயகர் தனபால் இவ்வாறு பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவை விதிகளை சுட்டிக் காட்டி சிஏஏ பற்றி விவாதிக்க அனுமதி தர சபாநாயகர் மறுத்து விட்டார்.

சபாநாயகர் கூறியதாவது 

திமுக கொடுத்த மனுவுக்கு மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிராகரித்த கோரிக்கையை மீண்டும் அவையில் கொண்டு வர முடியாது.

அதே வேளையில் வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து மட்டும் சட்டப்பேரவையில் பேசலாம்.