சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், 82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு புதுவாழ்வை பரிசளித்திருக்கிறது

சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், 82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரலுக்கு புதுவாழ்வை பரிசளித்திருக்கிறது

சென்னை – ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பெரும் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் பன்னோக்கு சிறப்பு சிகிச்சைகளுக்கான தொடர் மருத்துவமனைகளாக திகழும் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ், 82 வயதான  முன்னாள் ராணுவ ஜெனரல் டாக்டர். சத்யபாலன் [1955 பேட்ச், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்தவர். 33 வருடங்கள் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்] அவர்களுக்கு புது வாழ்வை அளித்திருக்கிறது. சர்ஜிக்கல் வால்வ் ஃபெயிலியர் ஆவதால் உண்டாகும் ‘அயோர்டிக் ஸ்டினோசிஸ்[Aortic Stenosis]  பாதிப்பு டாக்டர். சத்ய பாலனுக்கு இருந்தது.  பாதிப்பு தீவிரமாக இருந்ததால் அவர் பெரும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில்,  மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட்டான டாக்டர். சாய் சதீஷ் [Dr.Sai Satish, Senior Intervntional Cardiologist] அவர்களின் தலைமையிலான மருத்துவக்குழு பாதிப்படைந்த இதய வால்வை மீட்டெடுக்கும் வகையில் சிகிச்சையளித்திருக்கிறது. ட்ரான்ஸ் கதீடர் அயோர்டிக் வால்வ் ரீப்ளேஸ்மெண்ட் [Trans catheter Aortic Valve Replacement (TAVR) procedure] எனப்படும் மருத்துவ நடைமுறையின் மூலம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அயோர்டிக் வால்வ் ஸ்டினோசிஸ் என்பது  வால்வ் தொடர்பான நோய் ஆகும். இந்நோய் பெரும்பாலும் வயதின் காரணமாக உண்டாகும். வயது மூப்பின் போது அயோர்டிக் வால்வ் செயல்பட்டு தேய்வதன் மூலம் பாதிப்படையும். மேலும் வால்வின் உள்பகுதியில் கால்சியம் படிவதால், வால்வின் உள்பகுதியில் அயோர்டிக் வால்வ் வாய்பகுதி அளவு குறுகிப் போய்விடும். மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியன இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்நோயை கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, சிகிச்சை எடுத்து கொள்ளாமல் விட்டுவிட்டாலோ உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். ட்ரான்ஸ் கதீடர் அயோர்டிக் வால்வ் இம்ப்ளாண்டேஷன் ஆர் ரீப்ளேஸ்மெண்ட் [Trans Catheter Aortic Valve Implantation or Replacement (TAVI or TAVR)]  மருத்துவ நடைமுறையானது, தேவையான பகுதியில் மயக்க மருந்து கொடுத்தப்பின்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்நோயின் பாதிப்பு மிகவும் சிக்கலானதாக இருக்கும்பட்சத்தில் இந்த மருத்துவ நடைமுறையே சிகிச்சையளிக்க மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடைமுறையில் மிகவும் மெல்லிய, நெகிழ்வு தன்மை கொண்ட குழாய், ஃபெமோரல் தமனி [femoral artery] வழியாக செலுத்தப்படுகிறது. இது இதயத்தை அடைந்து நோயினால் பாதிப்படைந்த பழைய வால்வுக்கு பதிலாக புதிய வால்வை பொருத்த பயன்படுத்தப்படுகிறது. இந்த மருத்துவ நடைமுறையானது, இந்தியாவில் அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

82 வயதான முன்னாள் ராணுவ ஜெனரல் டாக்டர். சத்யபாலனுக்கு, சர்ஜிக்கல் வால்வ் ஃபெயிலியர் ஆனதால், அயோர்டிக் வால்வ் அடைப்பட்டு குறுகிப் போனதால் பாதிப்பு தீவிரமாக இருந்தது. இதனால் அவருடைய ஆரோக்கியமான வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது. நுரையீரல் வீக்கம் [pulmonary edema] அடிக்கடி ஏற்பட்டது. வயது மூப்பின் காரணமாக டாக்டர் சத்யபாலனுக்கு சிகிச்சையளிக்க பல  மருத்துவமனைகள் மறுத்துவிட்டன. இதனால் சர்ஜிக்கல் வால்வ் பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்துவிட்டது.  இந்நிலையில் அவர் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய் சதீஷை சிகிச்சைப் பெறுவதற்காக அணுகினார். அதன் பின்னர் அவருக்கு ட்ரான்ஸ் கதீட்டர் அயோர்டிக் வால்வ் ரீப்ளேஸ்மெண்ட் மருவத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டது.

டாக்டர். சத்தியபாலனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ நடைமுறை குறித்து சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் மூத்த இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் டாக்டர். சாய் சதீஷ் [Dr. Sai Sathish, Senior Interventional Cardiologist, Apollo Hospitals Chennai] கூறுகையில், ‘’டாக்டர். சத்தியபாலனுக்கு சிகிச்சையளிப்பது எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. அவரது காலில் இருந்து இதயத்திற்கு ரத்தத்தை திருப்பி அனுப்பும் குழாயில் கால்சியம் அதிகம் படிந்து இருந்ததுடன், குறுகியும் இருந்தது. இதனால் எந்த வால்வையும் அதன் வழியாக நகர்த்த முடியவில்லை. மேலும் நோயாளி இதற்கு முன் பெற்ற சிகிச்சைகள் குறித்த விவரங்களையும், ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை. இதற்கு முன் பொருந்திய சர்ஜிக்கல் வால்வ் பற்றிய தகவல்கள்,  அதன் அளவு குறித்த தகவல்கள் எதுவும் இல்லை. இதனால் இந்த பாதிப்படைந்த வால்வுக்கு பதிலாக புதிய வால்வை பொருத்துவது எங்களுக்கு பெரும் சவாலைக் கொடுத்தது. அவரது வயது மற்றும் உடல்நிலை ஆரோக்கியம் ஆகிய இரண்டு இந்த மருத்துவ நடைமுறையை மேற்கொள்வதற்கு சாதகமானதாக இல்லை’’

மேலும் அவர் கூறுகையில், ‘’இறுதியில் மருத்துவ நடைமுறை நல்ல முறையில் முடிந்தது. குறுகிப் போயிருந்த காலின்  ரத்த குழாய், ஒன்றிற்கு மேற்பட்ட பலூன்கள் மூலம், விரிவு படுத்தப்பட்டு புதிய வால்வ் சிஸ்டம் உள்ளே செலுத்துவதற்கு  அவசியமான  இடம்  இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பின்னர் வால்வ் இதன் வழியாக நகர்த்தப்பட்டு, பழைய சர்ஜிக்கல் வால்வின் உள்ளே பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டது. இந்த மருத்துவ நடைமுறை வெறும் 20 நிமிடங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது.

சிகிச்சைப் பெற்ற நோயாளி, முழு நினைவுடன் சிசியூ-க்கு மாற்றப்பட்டார்.  பின்பு அன்று மாலையே வழக்கமான வார்டுக்கு திரும்பினார். சிகிச்சை முடிந்த இரண்டாவது நாள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் தற்போது முடிந்த பாராளுமன்ற தேர்தலில் உற்சாகமாக கலந்து கொண்டு வாக்களித்திருக்கிறார்.