Aeropro நிறுவனத்தின் தலைவர் சேகர் ஜே மனோகரன், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 13 லட்சம் முக கவசங்களை கனிமொழி எம்.பி. முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
Aeropro நிறுவனத்தின் தலைவர் சேகர் ஜே மனோகரன், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 13 லட்சம் முக கவசங்களை கனிமொழி எம்.பி. முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
கொரோனா தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும், தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாராளமாக செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து முதலமைச்சரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ஏராளமானோர் நிதி உதவியும், பொருள் உதவியும் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த Aeropro நிறுவனத்தின் தலைவர் சேகர் ஜே. மனோகரன், ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் மொத்தம் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 13 லட்சம் முக கவசங்களை வழங்கினார். அப்போது திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி., உடனிருந்தார். மேலும், Aeropro நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளான லதா, ஜெகதீஷ், கலைவாணன் ஆகியோரும் உடன் இருந்தனர்.