3000 ரயில் பெட்டிகள்: பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை சாதனை
215 நாட்களில் 3000 ரயில் பெட்டிகள் தயாரித்து பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை சாதனை படைத்துள்ளது.
இந்திய ரயில்வேயின் பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை இவ்வாண்டில் 3000 ரயில் பெட்டிகளை ஒன்பது மாதத்திற்குள் தயாரித்துள்ளது. அதன் அர்ப்பணிப்பும், ஆற்றலும் இதில் வெளிப்படுகிறது. அதிகரித்து வரும் பெட்டிகள் தேவையை சந்திப்பதற்கு இது பெரிதும் உதவும்.
மேற்குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு, சென்ற ஆண்டு 289 பணி நாட்கள் எடுத்திருந்த நிலையில், இவ்வாண்டு 215 நாட்களிலேயே 3000 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு வரை இத்தனை நாட்களில் ஆயிரம் பெட்டிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.