ராஜஸ்தான் அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம் ..!
இந்தியாவில் உள்ளூர் போட்டியான சையத் முஷ்டாக் அலி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இப்போட்டி இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் 5 பிரிவுகளாக அணிகளை பிரிக்கப்பட்டு விளையாடி வந்தனர். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் B பிரிவில் இடம் பெற்ற கர்நாடகா அணியும் , தமிழ்நாடு அணியும் மோதியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணி ஆட்டம் தொடக்கத்திலிருந்து விக்கெட்டை பறிகொடுத்து பரிதாபமாக விளையாடி வந்தது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக ராஜேஷ் 23 ரன்கள் அடித்தார். தமிழக அணியில் அதிகபட்சமாக விஜய் சங்கர் 2 விக்கெட்டை பறித்தார். இதைத்தொடர்ந்து 113 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணி ஆட்டம் தொடக்கத்திலேயே ஹரி நிஷாந்த் ரன் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர் இறங்கிய அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சிறப்பாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதம் விளாசி கடைசி வரை களத்தில் நின்றார். இறுதியாக தமிழக அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 116 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு தமிழக அணி முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் தமிழக அணி , கர்நாடக அணியுடன் மோத உள்ளது.