சென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

சென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

சென்னை ராயப்பேட்டை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராயப்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் அவென்யூவில் அருண் குமார் என்பவர் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்துள்ளார்.

அப்போது விஷவாயு தாக்கியதில் அருண்குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அருண்குமாரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.