பந்துவீச்சு பரிசோதனையில் நற்சான்றிதழ் வாங்கிய நியூசிலாந்து கேப்டன்

பந்துவீச்சு பரிசோதனையில் நற்சான்றிதழ் வாங்கிய நியூசிலாந்து கேப்டன்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பற்கேற்று விளையாடியது. இந்த தொடரில் கடந்த ஆகஸ்ட் மாதம் காலே மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் மூன்று ஓவர்கள் வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

அப்போது கேன் வில்லியம்சனின் பந்து வீச்சு ஆக்சன் குறித்து புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், ஐசிசி அனுமதித்துள்ள 15 டிகிரிக்கு மேல் அவரது கை வளையவில்லை என்பது தெரியவந்தது. இதனால் கேன் வில்லியம்சனை தொடர்ந்து பந்து வீச ஐசிசி அனுமதித்துள்ளது.