'யாதும் ஊரே! யாவரும் கேளிர்! புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி பேசிய பிரதமர் மோடி

'யாதும் ஊரே! யாவரும் கேளிர்! புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி பேசிய பிரதமர் மோடி

கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் பிரதமர் மோடி பேசினார்.அவர் பேசுகையில்,ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்து வருகிறோம்.தண்ணீரை சிக்கனப்படுத்தும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.2025ம் ஆண்டுக்குள் முற்றிலுமாக காசநோய் ஒழிக்கப்படும்.

ஊரக பகுதிகளை தொலை தொடர்பு மூலமாக இணைக்க திட்டம்.எங்கள் நாட்டின் வளர்ச்சியே எங்களுடைய கனவு. எங்கள் நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு உதவும் வகையில் இருக்கும்.

கணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்ற புறநானூற்றுப் பாடலை எடுத்து காட்டி பேசினார்.அவர் பேசுகையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என 3000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாடு கூறியது.எங்களுக்கென தனியாக கலை, கலாச்சாரம் இருக்கிறது.